இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூரில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.