இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சிவகாசியில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-11-26 19:21 GMT

சிவகாசி

இந்திய அரசியல் அமைப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் நடைபெற்றது. அனுப்பன்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் கவிதாபாண்டியராஜன் கலந்து கொண்டார். அவர் உறுதி மொழி வசிக்க, அலுவலக பணியாளர்களும், பொதுமக்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதேபோல் ஆனையூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் (பொறுப்பு) முத்துமாரி தலைமையில் உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேவர்குளத்தில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். இதேபோல் நாரணாபுரம், பள்ளப்பட்டி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம், செங்கமலநாச்சியார்புரம், மேலாமத்தூர், சுக்கிரவார்பட்டி, சாமிநத்தம், ஆனைக்குட்டம், பூலாவூரணி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துக்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்களும், ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்