இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-02-13 21:36 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகில் காமராஜர் சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் கலை முருகன் தலைமை தாங்கினார்.

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு எடுக்க வேண்டும், வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு உதவி கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும், வள்ளியூர் பேரூராட்சியில் முன்பணம் செலுத்தியவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், வள்ளியூர் புதிய பஸ் நிலையம், சந்தை கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட செயலாளர் லட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன் ஆகியோர் பேசினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். மாநகர துணை செயலாளர் சந்தனமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்