செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.;
சுதந்திர தின விழா
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். செங்கல்பட்டு நகராட்சியில் நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசியக்கொடியேற்றினார். துணைத்தலைவர் அன்புச்செல்வன் இனிப்பு வழங்கினார். இதுபோல செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் மாவட்ட நீதிபதி மாவிஸ் தீபிகா சுந்தரவதனா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட சிறைச்சாலையில் ஜெயிலர் தமிழ்மாறன், செங்கல்பட்டு ஊர் காவல் படை அலுவலகத்தில் படைப்பிரிவு தளபதி கவியரசன் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அதேபோல் செய்யூர் தாசில்தார் பெருமாள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், துணை போலீஸ் சூப்பிரண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இதே போல் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். அச்சரப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதேபோல் சித்தாமூர் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதே போல் லத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுபலட்சுமி பாபு தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். அப்போது துணைத்தலைவர் அகத்தியன் உடன் இருந்தார்.
ஊராட்சி செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். அப்போது துணைத்தலைவர் அபிராமி, ஊராட்சி செயலர் மலர்விழி சகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். அப்போது துணைத்தலைவர் அருணகிரி, ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி இயக்குனர் அகத்தியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தேசியக்கொடியை ஏற்றினார்.
மண்ணிவாக்கம்
மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், வண்டலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செல்வ சுந்தரி ராஜேந்திரன், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கல்யாணி ரவி, நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லட்சுமணன், காரணைப்புதுச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நளினி ஜெகன், ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதே போல நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கொளப்பாக்கம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு நிதி உதவியை வழங்கினார்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஏற்றி வைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன், சங்கீதா வேலு, படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், துணைத் தலைவர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி, கல்லூரிகளில்
காஞ்சீபுரம் செவிலிமேடு விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேசிய கொடியை சேர்மன் தாமோதரன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி தாளாளர் ஜெய்சங்கர் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
காஞ்சீபுரம் அடுத்த தூசி பாலிடெக்னிக்கில் தேசியக்கொடியை முதல்வர் சசிக்குமார் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் வெங்கடேசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சீபுரம் வெள்ளைகேட்டில் உள்ள பல்லவன் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்மன் பா.போஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். காஞ்சீபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசியக்கொடியை சேர்மன் சஞ்சீவி ஜெயராம் ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
குன்றத்தூர்
குன்றத்தூர் நகர மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். அவருடன் நகராட்சி கமிஷனர் சுமா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாங்காடு நகரமன்ற வளாகத்தில் நகர மன்ற தலைவர் சுமதி முருகன் தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அவடன் துணை தலைவர் ஜபருல்லா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், நந்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சசி (என்ற) முத்துராமன், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன், கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி ஏசுபாதம், கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுந்தரேசன் ஆகியோர் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்கள்.