ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா

ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

Update: 2023-08-16 17:24 GMT

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீசாரதா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தினவிழா ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்விக்குழுமத்தின் நிறுவனத்தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கி, இந்திய விடுதலைப்போராட்டத்தின்போது தேசதலைவர்களின் தியாகங்கள், உலக அளவில் இந்தியாவின் வியத்தகு வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கலைச்செல்வி வரவேற்றார். துணைத்தலைவர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவர்களான டாக்டர் விக்னேஷ், கனரா வங்கி அலுவலர் ராம்கி ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கல்விக்குழுமத்தலைவர் பொன்னாடை அணிவித்து கேடயங்கள் வழங்கி கவுரவித்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகளின் தேசப்பற்று நடனம், நாடகம், சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாபவன் பள்ளி முதல்வர் சத்யா, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, பாலிடெக்னிக் முதல்வர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் மெட்ரிக் மகளிர் பள்ளி முதல்வர் கோமதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்