சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.கே.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் முருகேசன் தலைமை தாங்கினார். பி.டி.ஏ.பொருளாளா் கணேசன், உதவி தலைமை ஆசிரியா் சமுத்திரக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றினார். ஆசிரியர்கள் சுடர்மணி, மாரிமுத்து ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியா் சத்தீஸ்வரி நன்றி கூறினார்.