இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இசக்கி குழுமத்தின் தலைவர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி பேசினார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.