தீன் கல்லூரியில் சுதந்திர தின விழா

மயிலாடுதுறை தீன் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது. இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.;

Update: 2023-08-15 18:45 GMT

மயிலாடுதுறை அருகே நீடூர்- கருவங்குடியில் உள்ள தீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ரபியுதீன் தலைமை தாங்கினார். தீன் குழும தலைவர் ஜலாலுதீன், ஜாமியா மிஸ்பாகுல் ஹூதா அரபிக் கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில், கல்லூரி மேலாண்மை இயக்குனர் குர்ஷித்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் முத்துக்குமார் வரவேற்றார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் சுப்புரத்தினம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்