கும்கோணம்
கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கும்பகோணம்
கும்பகோணம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் அன்பழகன் எம்.எல். ஏ. தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். கும்பகோணம் அரசு ஆண்கள் தன்னாட்சி கல்லூரியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மீனாட்சிசுந்தரம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். கும்பகோணம் அரசினர் தன்னாட்சி பெண்கள் கலைக்கல்லூரியில் முதல்வர் விஜயலட்சுமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
கும்பகோணம் கோர்ட் வளாகத்தில் தலைமை குற்றவியியல் நீதித்துறை நீதிபதி சண்முகப்பிரியா, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லதா, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தங்கபிரபாகரன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
பட்டீஸ்வரம்
பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்யாணசுந்தரம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தேசியக்கொடி ஏற்றினார். கும்பகோணம் அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அரசு போக்குவரத்து அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் மற்றும் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்களின் குழந்தைகள் என 485 பேருக்கு பரிசுகளை வழங்கினார்.
கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர தலைவர் பி.எஸ்.சங்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் குடந்தை தெற்கு வட்டார தலைவர் நடுவக்கரை கிருஷ்ணமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் பிரபாகர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம், துணை சூப்பிரண்டு அலுவலகங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான் தேசியக்கொடி ஏற்றினார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், நகராட்சி அலுவலகத்தில் நகர சபை தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர். பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் மணிமுத்து கொடி ஏற்றி வைத்தார். பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட துணை தலைவர் வக்கீல் ராமசாமி முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. திருச்சிற்றம்பலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் கண்ணப்பன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். செருவாவிடுயில் அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
சுவாமிமலை பேரூராட்சி
சுவாமிமலை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா முன்னிலையில் நடைபெற்றது. சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி தேசியக்கொடியேற்றினார். இதில் துணைத்தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
பேராவூரணி
பேராவூரணி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. தேசியக்கொடியை ஏற்றினார். பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சாந்தி சேகர் தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய சமூக ஆர்வலர் மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அம்மாப்பேட்டை
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.வி.கலைச்செல்வன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், முன்னாள் ராணுவத்தினர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையர் ஆனந்தராஜ் வரவேற்றார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) முகமது அமானுல்லா நன்றி கூறினார்.