சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆதியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தேசிய கொடி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்கள் சுரேஷ்குமார், சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். தினேஷ்குமார் தேசிய கொடி வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைகுழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.