வரத்து அதிகரிப்பு எதிரொலி: கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விலை குறைவு: தக்காளி கிலோ ரூ.9-க்கு விற்பனை

வரத்து அதிகரித்ததன் எதிரொலியாக கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விலை குறைந்தது

Update: 2022-08-23 14:11 GMT

கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரர்கள் இன்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கேரளாவை சேர்ந்த மக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை குறைந்தது. அதன்படி இன்று சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்):- கத்தரிக்காய்- ரூ.26, சின்ன வெங்காயம்-ரூ.20, புடலை- ரூ.5, பாகற்காய்-ரூ.26, சுரைக்காய்-ரூ.10, முருங்கைக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.18, அவரைக்காய்-ரூ.25, முள்ளங்கி-ரூ.15, நூல்கோல்-ரூ.20, தக்காளி-ரூ.9-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்