திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒரேநாளில் 18 பேர் பாதிப்பு

திருச்சியில் ஒரே நாளில் ௧௮ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Update: 2022-06-24 19:29 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தினசரி 10 பேருக்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 3 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் 74 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்