கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.;
பிலிகுண்டுலு,
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 4092 கன அடியில் இருந்து 7068 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5068 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 3வது நாளாக 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.