மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2023-11-08 04:57 GMT

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து கடந்த மாதம் 10-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடவில்லை.

ஆனாலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்