மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.;

Update: 2022-09-14 22:06 GMT

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து இரவு மேலும் அதிகரித்து, அணைக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்