கொரோனா பரவல் அதிகரிப்பு: சேலம் கோர்ட்டுக்கு வருவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, சேலம் கோர்ட்டுக்கு வருவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகி உள்ளது.;
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோர்ட்டுக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்த பெரும்பாலான வக்கீல்கள் நேற்று முககவசம் அணிந்தபடி வந்தனர். அதேசமயம், வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு வந்த சிலர் முகக் கவசம் அணியாமல் வந்திருந்தனர். பின்னர் அவர்களை முகக்கவசம் அணியுறுமாறு அங்கிருந்து கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் அறிவுறுத்தினர். சேலம் கோர்ட்டுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.