நெல்லையில் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரிப்பு

நெல்லையில் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.;

Update: 2023-02-13 20:45 GMT

நெல்லையில் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

பனிப்பொழிவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை விட மிக குறைவாகவே பெய்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி பணிகள் நடைபெறவில்லை.

அதற்கு மாறாக இந்த 2 மாவட்டங்களிலும் கடந்த கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து தை மாதம் நிறைவுற்ற நிலையில் சமீப காலமாக மாலை முதல் காலை நேரம் வரையிலும் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.

சிரமம்

நெல்லை சுற்றுவட்டாரங்களில் வென்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு அதிகாலை நேரத்தில் காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ெநல்லை வண்ணார்பேட்டை பைபாஸ் சாலை, நயினார்குளம் சாலை, ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தொலை தூரத்தில் வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

விளக்குகளை எரியவிட்டபடி...

பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர். வயல்களில் நிறைந்திருக்கும் நெல் மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன.

பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்