மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கதவணை நீர் மின்நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே கதவணை நீர்மின் நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-07-29 22:48 GMT

எடப்பாடி:

மின்உற்பத்தி நிலையங்கள்

சேலம் மாவட்டம் சேக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை பகுதிகளில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து மின்உற்பத்தியின் அளவும் மாறுபடும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீரான மின்உற்பத்தி

தற்போது அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை, மின் அலகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கதவணை நீர்மின்நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் மழைப்பொழிவும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் தொடர்ந்து ஒரே சீராக இருக்கும்பட்சத்தில் நீர்மின் நிலையங்களில் வரக்கூடிய மாதங்களில் மின்உற்பத்தி சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்