தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு

தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை 3600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;

Update: 2023-06-12 07:46 GMT

சென்னை,

ஊரகப்பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியத்தை 3600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 396 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்