அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்கலில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது

Update: 2022-10-25 21:25 GMT

நெல்லை, தென்காசி மாவட்டங்கலில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருந்தாலும், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான மழையே பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

பாபநாசம்-கொடுமுடியாறு

பாபநாசம் அணை நீர்மட்டம் 84.30 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 512 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனுடன் இணைந்த சேர்வலாறு அண நீர்மட்டம் 96.32 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து 97 கன அடியாக உள்ளது. தண்ணீர் திறக்கப்படவில்லை. அணை நீர்மட்டம் 71.10 அடியாக உள்ளது.

52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 47.50 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 48.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 45 கன அடியாகவும், வெளியேற்றம் 2 கன அடியாகவும் உள்ளது. இந்த அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம்

இதே போல் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா நதி அணை நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 63 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 14 கனஅடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.46 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 25 கன அடி தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

குண்டாறு அணை நீர்மட்டம் 33.37 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3 கனஅடியாகவும், வெளியேற்றம் 3 கன அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 35 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் உள்ளது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

நெல்லை -17, பாளையங்கோட்டை -10, பாபநாசம் -4, நம்பியாறு -7, கொடுமுடியாறு -5.

கருப்பாநதி -1, குண்டாறு -8, அடவிநயினார் -3, செங்கோட்டை -3, தென்காசி -2, சங்கரன்கோவில் -11.

Tags:    

மேலும் செய்திகள்