கோடியக்கரையில் மீன்வரத்து அதிகரிப்பு
கோடியக்கரையில் மீன்வரத்து அதிகரிப்பு
மீன் பிடி சீசன் தொடங்கியதால் கோடியக்கரையில் மீன்வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீன்வரத்து அதிகரிப்பு
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் மிக குறைந்த அளவே மீன் பிடித்து வந்தனர். மேலும் புயல், மழை மற்றும் பல்வேறு காரணங்களால் சீசன் மிக மந்தமான நிலையிலேயே காணப்பட்டது. தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி நேற்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் வலையில் திருக்கைமீன் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் அதிகளவு கிடைத்தது. இந்த மீன்களை மீன்பிரியர்கள் வாங்கி செல்கின்றனர். மீன்வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீனவர்கள் மகிழ்ச்சி
ஒரே நாளில் சிறிய வகை கலர் மீன் சுமார் 20 டன் கிடை த்தது. கடந்த 10 நாட்களாக இந்த வகை மீன்கள் 10 டன் முதல் 20 டன் வரை கிடைக்கிறது. இந்த மீன்கள் கோழி தீவனம் தயாரிக்கவும், மீன் எண்ணெய் தயாரிக்கவும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1 கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதிக அளவில் இந்த மீன்கள் கிடைப்பதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.