சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் உயர்வு

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2024-07-30 09:12 GMT

சென்னை,

சென்னை சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதே மாடு இரண்டாம் முறை பிடிக்கப்படும் போது மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 15,000 என்றும், மேலும் பராமரிப்பு செலவுக்காக மாடு ஒன்றுக்கு ஆயிரம் என கூடுதலாக வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்