திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை இல்லை. நேற்று முன்தினம் நிலவரப்படி, 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். இதில் 7 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,004, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,822, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,161 ஆகும். மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.