கூடலூர் பகுதியில் தொடர் மழை:தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன-பாதிப்புகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு

கூடலூர் பகுதியில் தொடர் மழைக்கு தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் கடை கட்டிடங்கள் உடைந்தது. மேலும் மழை வெள்ள பாதிப்புகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-07 01:30 GMT

கூடலூர்

கூடலூர் பகுதியில் தொடர் மழைக்கு தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் கடை கட்டிடங்கள் உடைந்தது. மேலும் மழை வெள்ள பாதிப்புகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

தடுப்புச்சுவர் இடிந்தது

கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பல இடங்களில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தது. கூடலூர் அருகே நாடுகாணியில் போலீஸ் சோதனை சாவடி எதிரே மேடான பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. முக்கிய சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நடைபாதையின் கரையோரம் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு இடிந்து விழுந்தது.

தொடர்ந்து தடுப்புச்சுவர் அருகே உள்ள கடையின் கட்டிடம் மீது விழுந்ததால் கோபிநாத் என்பவரது கடையின் சுவர் உடைந்து விழுந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதேபோல் பொதுமக்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

இதேபோல் நாடுகாணியில் இருந்து தேவாலா அட்டி செல்லும் சாலையில் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் இதன் கரையோரம் கட்டப்பட்ட தடுப்புச்சுவரும் இடிந்து விழுந்தது. தொடர்ந்து கூடலூர் பழைய நீதிமன்ற சாலையோரம் தனியார் பள்ளிக்கூட வளாக கரையோரம் கட்டப்பட்ட தடுப்பு வேலி இடிந்து விழுந்தது.இதனால் அப்பகுதியில் நின்றிருந்த மின் கம்பம் மற்றும் மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சேதமடைந்த இடத்தை கலெக்டர் அம்ரித் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து ஆபத்தான மரத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பந்தலூர் பகுதியில் மழையால் சேதம் ஏற்பட்ட இடங்களை கலெக்டர், அலுவலர்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்