சாத்தூரில் தொடர்மழை
சாத்தூரில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
சாத்தூர்,
சாத்தூரில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு திருப்பத்தூர், நல்லமுத்தன்பட்டி, குமாரபுரம், நள்ளி, முள்ளிச்செவல், வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழை 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது அதேபோல 4 மணிக்கு மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அப்போது கிராமப் பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து மழைபெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகாிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.