வாலாஜாவில் பூங்கா திறப்பு விழா

வாலாஜாவில் ரூ.44 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.;

Update: 2022-11-30 16:57 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பூங்காவை திறந்து வைத்தார். இதில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நகரமன்ற தலைவர் ஹரிணித்தில்லை, துணைத்தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்