கோவில்பட்டியில்சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா
கோவில்பட்டியில்சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு நகர சுமை ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளர் சங்க அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சங்கத் தலைவர் எம். முருகன், செயலாளர் எம். அழகுராஜ் தலைமை தாங்கினார். செல்வம் முன்னிலை வகித்தார். அலுவலக கட்டிடத்தை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் எம். ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். சங்கத் துணைத் தலைவர் மனோகர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். துணைத்தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.