புதிய வாரச்சந்தை தொடக்க விழா
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை தொடக்க விழா நடந்தது
கொள்ளிடம்:
கொள்ளிடத்தில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவில் வாரச்சந்தை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கி புதிய காய்கறி சந்தையை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவப்பிரகாசம், கிராம தலைவர் செந்தில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.