நற்கருணை ஆலய திறப்பு விழா
கோவில்பட்டியில் நற்கருணை ஆலய திறப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நற்கருணை ஆலய திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து நற்கருணை ஆலயத்தினை ரிப்பன் வெட்டி ஜெபம் செய்து திறந்து வைத்தார். ஏற்பாடுகளை கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கேல் மகேஷ் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.