ஸ்பெக்ட்ரா அகாடமி திறப்பு விழா
நெல்லையில் ஸ்பெக்ட்ரா அகாடமி திறப்பு விழா நடந்தது.
ஸ்பெக்ட்ரா அகாடமி நிறுவனமானது மருத்துவம் மற்றும் பொறியியல் நுைழவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தலைசிறந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரியில் அளித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் கிளை நெல்லையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஜகோபி கார்பன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தாமஸ் ஆண்டனி கலந்து கொண்டு, நிறுவனத்தை திறந்து வைத்தார். அம்பாள்ஸ் டையபாட்டிக் டாக்டர் பக்தவத்சலம் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியின் முதல்வர் உஷாராமன், ரோஸ்மேரி பள்ளியின் நிர்வாகி மற்றும் இயக்குனர் செரின் டேவிட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். நிகழ்ச்சியில் ஸ்பெக்ட்ரா அகாடமி நிறுவனத்தின் சேர்மன் செந்தில்குமார், மேலாண்மை இயக்குனர் கார்த்திகேயன், இயக்குனர் சுரேஷ், நெல்லை கிளையின் நிர்வாகிகள் சுரேஷ், கார்த்திகா சுரேஷ், கல்வி இயக்குனர் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.