ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா - பாஜக தொண்டர்கள் அதிருப்தி
தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனவும் கூறி, பாஜக தொண்டர்கள் கூச்சலில் ஈடுபட்டனர்.;
தென்காசி,
தென்காசி ரயில் நிலைய மேம்பாட்டு நிகழ்ச்சியில் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என, பாஜக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனவும் கூறி, பாஜக தொண்டர்கள் கூச்சலில் ஈடுபட்டனர்.