புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது;

Update: 2023-05-21 18:45 GMT

மயிலாடுதுறை அருகே உள்ள வள்ளாலகரம் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் அதிக அளவில் குடியிருப்பு நகர்களை கொண்ட ஊராட்சியாக வள்ளாலகரம் இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் ரேஷன் கடை நிரந்தர கட்டிடம் அமைத்துகொடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். அதனையடுத்து எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியில் வெங்கடேஸ்வரா நகரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயசுதா ராபர்ட் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் குமாரசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகுமணி, குடியிருப்போர் நல சங்கம் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்