புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் திறப்பு

புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் திறத்து வைக்கப்பட்டது.;

Update: 2023-04-10 20:01 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் புதிய தீயணைப்பு நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தாா். இதையடுத்து ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்ற விழாவினை கலெக்டர் ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் விவேகானந்தன், உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன், வெம்பக்கோட்டை நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிலைய அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்