சங்கரநாராயண சுவாமி கோவிலில் மருத்துவ மையம் திறப்பு
சங்கரநாராயண சுவாமி கோவிலில் மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அறநிலையத்துறை சார்பில் மருத்துவ மையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சங்கர நாராயணசாமி கோவில் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய மருத்துவ மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் இரண்டு மருத்துவர்கள், 2 செவிலியர்கள், இரண்டு பண்ணோக்கு பணியாளர்கள் இந்த மருத்துவ மையத்தில் பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, சேர்மத்துரை, நகர செயலாளர் பிரகாஷ், நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நிர்வாகிகள் வாழைக்காய் துரைப்பாண்டியன், முத்துப்பாண்டியன், கேபிள் கணேசன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, கிளை செயலாளர் முருகராஜ், மாணவரணி கார்த்திக், அப்பாஸ், உதயகுமார், விவசாய தொழிலாளர் அணி அஜய்மகேஷ்குமார், வக்கீல் சதீஷ், வீரமணி, பிரகாஷ், விஜயகுமார், ஜெயக்குமார், குமார், பிரபாகரன் ஜான்சன், மருத்துவ மைய மருத்துவர்கள் விஷ்ணு, விக்னேஷ், கோகுல்குமார், லயன்ஸ் அரிமா சங்கத் தலைவர் அய்யாதுரை, வேணுகோபால், யாதவ சமுதாய தலைவர் முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.