அரசு பள்ளியில் சைக்கிள் நிழலகம் திறப்பு
தலைஞாயிறு அருகே அரசு பள்ளியில் சைக்கிள் நிழலகம் திறப்பு
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சைக்கிள் நிழலகத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன்அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன், பேரூராட்சி கவுன்சிலர் அஜய்ராஜா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பால் முருகானந்தம், ஆத்மா குழு உறுப்பினர் வீரகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கற்பகம் நீலமேகம், வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.