கலையரங்க பயிற்சி தொடக்க விழா

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்க பயிற்சி தொடக்க விழா நடந்தது.;

Update: 2023-07-22 18:45 GMT

கோவில்பட்டி:

சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலை அரங்கம் பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் முனியசாமி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை அமலபுஷ்பம் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலையரங்க பயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நட்டாத்தி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்