ரூ.31 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா
பனவடலிசத்திரம் அருகே ரூ.31 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
பனவடலிசத்திரம்:
மேலநீலிநல்லூர் ஒன்றியம் வடக்கு பனவடலி ஊராட்சி சொக்கலிங்கபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு வடக்கு பனவடலி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ஏசுதாஸ் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர்கள் ஜெயராமன், அருள்செல்வம், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மேலநீலிதநல்லூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் செல்வராஜா வரவேற்று பேசினார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் பாக்கியலட்சுமி, ஒன்றிய பொறியாளர் சுபாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சுவிலா நன்றி கூறினார்.