விளாத்திகுளத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளத்தில் திங்கட்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-05 18:45 GMT

எட்டயபுரம்:

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது போக்சோ வழக்கு பதிந்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசு, மாறாக போராடும் மல்யுத்த வீராங்கனைகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, போராட்டங்களை சீர்குலைப்பதை கண்டித்தும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட பா.ஜ.க எம்.பியை கைது செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சரவணமுத்து வேல், சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், நடராஜன், ரவீந்திரன், தாலுகா நிர்வாகிகள் ராமலிங்கம், பிச்சையா, வேலாயுதம், செல்வி, மார்க்சிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த பயணிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்