தூத்துக்குடியில்ரெயில் மோதி வாலிபர் பலி
தூத்துக்குடியில் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.;
தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் அருகே நேற்று காலையில் சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், தூத்துக்குடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார் என்பது தெரியவில்லை. அவர் அந்த வழியாக வந்த ரெயில் மோதி பலியானது தெரிய வந்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? இறந்தது எப்படி? என்பது குறித்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்.