தூத்துக்குடியில் தபால் தலை கண்காட்சி

தூத்துக்குடியில் தபால் தலை கண்காட்சி வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-10-07 18:45 GMT

இந்திய தபால் துறை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தேசிய தபால் வார விழாவை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தேசிய தபால் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 11.10.2022 தபால் தலை சேகரிப்பு நாளாக கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி தபால் கோட்டத்தின் சார்பில் தபால் தலை சேகரிப்பு குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது.

தபால் தலை சேகரிப்பு என்பது பொழுதுபோக்கின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இந்த கண்காட்சி மூலம் இந்திய தபால் துறை வெளியிட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் தபால் தலைகள் மற்றும் இந்திய நாட்டின் வரலாற்றை பறைசாற்றும் அரிய தபால்தலைகளை அறிந்து கொள்ள முடியும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த கண்காட்சியை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்