தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-07-10 18:45 GMT

தூத்துக்குடியில் மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாயராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் பேரவையின் மாவட்ட செயலாளர் எஸ். பி மாரியப்பன், மாவட்ட தலைவர் எம்.எஸ்.டி.ரவி சேகர், மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக வருகை தரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர்.தனபாலனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, தமிழகத்தில் கள் விற்பனையை அரசு கூட்டுறவு சொசைட்டி மூலம் விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும், பதநீர் விற்பனை செய்யும் நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது, தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பொன்ரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பிரதிநிதி சசி, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சப்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்