தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது.

Update: 2023-08-06 18:45 GMT

தூத்துக்குடி, பாத்திமா நகரைச் சேர்ந்தவர் விமல். இவருடைய மகன் வெலிங்டன் (வயது 24). இவருடைய நண்பர் சில்வர்ஸ்டர். இவருக்கும், வெலிங்டனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வெலிங்டன் சில்வர்ஸ்டருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனால் அவர் மீது ஜெகதீசுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வெலிங்டன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்து உள்ளது. உடனடியாக வெலிங்டன் உள்ளிட்டவர்கள் தீயை அணைத்து உள்ளனர். ஆனாலும் மோட்டார்சைக்கிள் சேதமடைந்துள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்