தூத்துக்குடியில்மனைவியை தாக்கிய கணவன் கைது

தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-15 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள கோயில்பிள்ளை விளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 38). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி இசக்கியம்மாள் (33) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கிறிஸ்டோபர், மனைவி இசக்கியம்மாளை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்