தூத்துக்குடியில்பத்திரப் பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வு
தூத்துக்குடியில் பத்திரப் பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வு நடத்தினார்.;
பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி, புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கண்டார். அங்கு முறையாக பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறதா, ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து தீவிர ஆய்வு செய்தார். தொடர்ந்து முறையாக பத்திர பதிவுகளை மேற்கொள்ளவும், விழா காலங்களில் கூடுதல் பத்திர பதிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.