தூத்துக்குடியில் மாவட்ட திட்டக்குழு கூட்டம்

தூத்துக்குடியில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2023-06-29 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு திட்டக்குழு தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திட்டக்குழுவின் பணிகள் குறித்து புதிய உறுப்பினர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

கூட்டத்தில் திட்டக்குழு தலைவர் பிரம்மசக்தி பேசும் போது, மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நமது கடமையாகும். மக்களுக்கு தேவையான திட்டங்களை அதிகாரிகளிடம் எடுத்துக்கூற வேண்டும். அதிகாரிகள் அறிவிக்கும் திட்டங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், மக்களுக்கு பயன்படாது என்றால் அதனை உடனடியாக தெரிவிக்க வேண்டும். திட்டக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் ஒத்துழைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நமது பங்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்