தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.;
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி தமிழ் மொழியாக்க புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கா.மை. அகமது இக்பால் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர்.ஆட்டோ கணேசன், முன்னாள் செய்தி தொடர்பாளர் செல்வகுமார், வக்கீல் அணி அர்ஜூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், சிவன் கோவில் தேரடி, காய்கனி மார்க்கெட், புதிய பஸ்நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் நேரடியாக மனுஸ்மிருதி புத்தகம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வேந்தன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நிர்மலா. பொருளாளர் சஹர் பானு. 49-வது வார்டு செயலாளர் அந்தோனிசாமி, 50-வது வார்டு செயலாளர் டேனியல். சோட்டையன் தோப்பு முகாம் செயலாளர் ரஞ்சித், ராஜிவ்காந்தி நகர் முகாம் பொறுப்பாளர்கள் சேக் முகமது, விடுதலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.