தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹென்சன் பவுல்ராஜ், ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த கடையில சோதனை நடத்தினர். அங்கு இருந்த 135 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த சுடலைக்கண்ணு (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.