தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
தூத்துக்குடியில் அமைச்சர்கீதாஜீவன் முன்னிலையில் பா.ஜனதா கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
தூத்துக்குடி வடக்கு மண்டல பா.ஜனதா பிரமுகர் வினோத் தலைமையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 30 பேர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.