தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில்தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் சனிக்கிழமை தொடங்குகிறது.

Update: 2023-04-07 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தண்ணீர் பந்தல்

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பை ஏற்று தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட உள்ளன. கோடைகாலம் தொடங்கி இருப்பதால் வெப்பம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆத்தூரிலும், 9.45 மணிக்கு தெற்கு ஆத்தூரிலும், 10 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 10.30 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், 10.45 மணிக்கு பரமன்குறிச்சி பஜாரிலும், 11 மணிக்கு உடன்குடி பஸ் நிலையம் அருகிலும், 11.30 மணிக்கு மெஞ்ஞானபுரம் பஜாரிலும், 12 மணிக்கு நாசரேத் பேரூராட்சியிலும், 12.15 மணிக்கு குரும்பூர் பஜாரிலும் திறந்து வைக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து 12.30 மணிக்கு சேதுக்குவாய்த்தானில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

உறுப்பினர் சேர்ப்பு முகாம்

மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடன் பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் தி.மு.கவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதன் பேரில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உடன்குடியில் இன்று காலை 11 மணிக்கும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சூளைவாய்க்காலில மாலை 5.30 மணிக்கும், 6 மணிக்கு முக்காணியிலும், 7 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஸ்பிக் நகரிலும் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில மேற்பார்வையாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணைஅமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், உறுப்பினர்கள், நகர் மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்