தூத்துக்குடியில், வகுப்புகளை புறக்கணித்துகல்லூரி மாணவ, மாணவிகள்திடீர் போராட்டம்

தூத்துக்குடியில், வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-02 18:45 GMT

தூத்துக்குடியில் சாலைப்பணிகள் காரணமாக கல்லூரிக்கு செல்ல தாமதமாவதாக கூறியும், ேபாக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை பணிகள்

தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் திடீர், திடீரென சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி 3-வது மைல் முதல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாளையங்கோட்டை ரோட்டின் இருபுறமும் தோண்டப்பட்டு சரியாக குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல தாமதமாகிறது. தாமதமாக செல்லும் வேளையில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை உள்ளே அனுமதிக்காமல் கேட்டை மூடிவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும், தாமதமாக வரும் மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிலும் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 150 மாணவிகள் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்